Saturday, June 23, 2018

அரிசி கலைந்த தண்ணீரின் பயன்கள்

நாம் தினமும் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களில் மிகவும் முக்கிய பங்கு மற்றும் முதல் இடம் வகிப்பது அரிசி.
நாம் அரிசியை பயன்படுத்தி சாதம், இட்லி, ஆப்பம், இடியாப்பம், கொழுக்கட்டை, இன்னும் நிறைய உணவுப் பதார்த்தங்கள் செய்கிறோம். அரிசியை பயன்படுத்தும் முன் அரிசியில் நீர் ஊற்றி ஒரு முறை கழுவி விட வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். இதன்பின் அரிசி கழையும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 1. சிறு குழந்தைகளுக்கு குளிப்பாட்ட, அரிசி கழைந்த தண்ணீரை சூடாக்கி, இளஞ்சூட்டில் குழந்தையின் மேனி மீதும், கை, கால்களில் ஊற்றி வந்தால், மேனி அழகுடனும், கை, கால்கள் வழுவுடனும் இருப்பார்கள். 2. அரிசி கழைந்த தண்ணீரை முகம் கழுவினால் முகம் பொழிவுடன் காணப்படும். மற்றும் தலை அலசும் போது பயன்படுத்தி வந்தால், தலை முடிக்கு தேவையான போஷாக்கு கிடைக்கும் அத்துடன் தலை முடி மிருதுவாக காணப்படும். முக்கியமாக சீயக்காய் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 3. செடிகளுக்கு அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி வந்தால் செடி நன்கு வளரும்.